புதன், 18 ஜூன், 2014

எனது சொந்த ஊர் பற்றி ஒரு சிறிய தொகுப்பு.
திருநெல்வேலி மாவட்டம் மேலசெவல் கிராமம்,நெல்லை ஜங்ஷன் இருந்து சுமார் 22Kம் தூரம் இருக்கும் , நெல்லையில் 1985-1995 யில் எல்லாம் ஒரு பஸ் நிலையம் தான் நெல்லை ஜங்ஷன், அதே போல் ஒரு பஸ் மட்டும் தான் 14C அந்த பஸ் ல ஏறின மட்டும் தான் செவல் ஊரில் நிற்கும் ஆனாலும் அவபோது பாபநாசம் போகிற வண்டி கூட செவல் ஊரை கடந்து தான் போகும் ஆனால் பஸ் நிறுத்தத்தில் நிறுத்த மாட்டார் , செவல் நிறுத்தம் என்று சொன்னால் தெரியாது கல்மடம் என்று சொன்னால் தான் தெரியும் , ஆம் செவல் பஸ் நிறுத்தத்தில் கல் மடம் மிக மிக முக்கியம் வாய்ந்தது.,
எங்கள் ஊரை பற்றி தெரியவில்லை போலும் பாரதிக்கு , தெரிந்திருந்தால் ஜாதிகள் இல்லையடி பாப்பா என்று பாடி இருக்க மாட்டார் , ஏன் என்றால் எங்கள் ஊர் ஜாதி கடல் சங்கமிக்கும் குமரிகண்டம் , தேவர், நாடார், பார்பாணன் , பிராமணன் கோனார் ,பறையன், பள்ளர் ,அருந்ததியர், ஹிந்து முஸ்லிம் ,வன்னியர் இப்படி தெரிந்த ஜாதிகளின் பெயரை சொன்னேன் இன்னும் தெரியாத ஜாதியார் நிறைய பேர் வசிக்கிற இடம் தான் மேலசெவேல்
ஜனநாயகம் வாழும் இடம் என்றால் அது இந்த கல் மடம் தான், தினம் காலை எல்லா ஜாதிகராரும் சங்கமிக்கும் இடம் அது , என்ன தான் தங்கள் வீட்டில் டீ குடித்தாலும் அங்க வந்து ஒரு கட்டிங் போட்டால் தான் அந்த நாள் முழுமை பெரும் , எல்லார் மனதையும் கொள்ளை கொண்ட டீ கடைகள் உள்ள மிக சிறப்பு மிக்க இடம் தான் அந்த கல்மடம், நானும் இந்த கல்மடம் டீ க்கு அடிமை தான், விடுமுறைக்கு வீடிருக்கு வந்தால் தவறாது அங்கு போய் டீ குடிப்பது வழக்கம் ,
என்ன டா இவன் ஜாதி பத்தியே சொல்லிட்டு இருக்கான் என்று தோன்றும், சொல்வேன் சொல்லிக்கொண்டே தான் இருப்பேன் ஏன் என்றால் ஜாதிகொடுமையினால் பல சம்பவங்கள் நடந்ததை யாராலும் மறக்க முடியாது , ஆம் 1985 -1995 காலங்களில் பாண்டியன் என்று சொல்லும் இனத்தவர்கள் எங்கள் கிராமத்தை ஆட்டி படைத்தார்கள் , எங்கள் ஊரில் உள்ள வயல் எல்லாம் அவர்கள் வசமா தான் இருந்தது , அவர்கள் வயல்களுக்கு தான் எங்குல பெண்களும் ஆண்களும் அறுவை , கலைபரித்தல், நாற்று நடுதல் போன்ற பணிகளுக்கு செல்வதுண்டு , வயல் வரப்புகளில் வேலை செய்தவர்கள் மிக கஷ்டப்பட்டு தங்கள் குடும்பத்தை ஓட்ட வேண்டிய நிலைமை தான் அப்போது, அவர்கள் வந்து எங்கள் தோட்டங்களில் தங்கள் இஷ்டத்துக்கு முட்களை வெட்டி செல்வதும் உண்டு , சரி இதெல்லாம் பெரிய குற்றமாக நினைக்க வில்லை , நாட்கள் செல்ல செல்ல அவர்களின் அடாவடி ஒரு படி மேல போய் எங்களை மேலும் படுத்தியது . நடு இரவு 12 மணியளவில் நானும் எனது பாட்டியும் தூங்கும் வேளையில் தடா தடா என்று கதவை தட்டும் சத்தம் கேட்டு எழுந்தோம் , அப்போது தான் ஊரில் உள்ளவர்கள் சொன்னார் கயல்விழி யை 5 பேர் சேர்ந்து வயலில் வைத்து கதற கதற கற்பழித்த சம்பவம் , நெஞ்சை ஒரு நிமிடம் உலுக்கியது , நான் வயதில் சிறியவன் ... ஊரில் உள்ள பெரியவர்களில் அப்ரகம் அவர்கள் மட்டும் தான் அவர்களை விரட்டி சென்று பிடிக்க முயற்சித்தார் ஆனாலும் கயவர்கள் தப்பி விட்டார்கள் ,
எங்க இருந்து வந்தது அவர்களுக்கு இப்டி ஒரு தைரியம் , இதேய அவர்கள் இடம் சென்று நாங்கள் இதை செய்து இருந்தால் சும்மா விட்டு இருப்பார்களா , எங்கள் ஊரில் வந்து அனைவரையும் கருவருதுட்டு போயிருப்பான், சரியாய் இரவு 2 மணியளவில் கணேஷ்குமார் வந்தரர் .. அவர் ஒரு லாயர், உடனடியாய் போலீஸ் க்கு போன் செய்து நடந்தை சொன்னார் , F I R போடப்பட்டது ,நீண்ட இடைவளிக்கு பின்னர் குற்றவாளிகள் பிடிகபட்டனர்ர், தண்டனையும் கொடுக்க பட்டது , இதில் முக்யமான விஷயம் என்னவென்றல் பெண்ணின் கணவர் மனநலம் பாதிகபட்டவர், , இதை ஏன் முன் நிறுத்தி சொன்னேன் என்றால் நாம் அனைவரும் ஒன்றாக வாழ வேண்டும் , என்பது தான் ,----
நான் என்ன சொல்வது நாம் வேற்று ஜாதியினால் மட்டும் தான் பிரிந்து இருக்கிறோம் என்று நினைத்தால் அடபாவிங்கள உள்ளுக்குளே பிரிந்து தான் கிடந்தோம், இன்னும் பிரிந்து தான் கிடக்கிறோம். ஆம் எனது தெருவில் கூட எனக்கு விவரம் தெரிந்த நாள் முதல் வடக்கு தெரு தெற்கு தெரு என்று பிரிந்து தான் கிடந்தோம். .ஆனாலும் எங்களை எங்கள் பள்ளி பருவம் இணைத்தது ஒன்றாக படித்தோம் , எங்கள் பள்ளியில் பாடம் சொல்லி கொடுத்த ஆசிரியை சீதா லெட்சுமி அவர்களை என்றும் மறக்க முடியாது , , ஐய்யர் பள்ளிக்கூடம் என்று சொன்னால் எல்லாருக்கும் தெரியும்
இன்று அமெரிக்கா சவுதி அராபிய , குவைத் போன்ற நாடுகளில் , மற்றும் சென்னை மும்பை போன்ற மெட்ரோ சிட்யிலும் தங்கள் கால் பதித்தவர் அனைவரும் அப்பள்ளியில் பாடம் பயின்றவர் தான் , , ஆம் இப்போது எங்கள் பகுதியில் உள்ள அனைவரும் தங்கள் தனித்தன்மையை காண்பித்து கொண்டு இருகிறார்கள் , சிலர் பொறியாளர் , சிலர் மருத்துவ துறையுலும் இருக்கிறார்கள்,
இப்படி ஒரு முன்னேறற்றம் எங்கள் ஊரில் நடந்தது ,
இதற்கு எல்லாம் காரணம் முறையான கல்வி மட்டுமே , எங்களை விரட்டி அடித்த கூட்டம் கூட தற்போது கல்வி அறிவினால் வரும் நன்மையை புரிந்து கொண்டனர் என்றே நினைக்கிறன் ஏனெனில் இது வரை அவர்களால் எங்களுக்கு எந்த வித தொந்தரவும் யெல்லை என்பதே.
. ஜாதிகள் இரண்டொழிய வேறில்லை - 1ஆண் ஜாதி 2 பெண் ஜாதி .
நமக்குள் ஏன் வேற்றுமை , மனிதனின் ஆயுள்காலம் மிக குறைவு , அதில் மனிதனாக வாழ முயற்சிப்போம் , மிருகமாக அல்ல
அன்புடன் 
கவிஅரசன்

வெள்ளி, 6 ஜூன், 2014

Koliyar Street Melaseval Kodai viza

Kovil Kodai viza Preparations

வியாழன், 5 ஜூன், 2014

Koliyar Street Melaseval Kodai vizha

KOLIYAR STREET KODAI VIZHA PREPARATION

சனி, 21 டிசம்பர், 2013

சுகித்துக்கொண்டே சபிக்கிறேன் உன் நினைவுகளை.
             
""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""

உன் துளி நினைவு,என்னை விழுங்கும் ஆழிப்பேரலை!
       
 """"""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""

உன் சிறு அலட்சியம் போலொரு பெருவேதனை எனக்கு வேறெதுவுமில்லை

   """"""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""

உன் நினைவை மட்டும் சுமந்து நடமாடும் விசித்திர கோமா நோயாளி நான்.

   """"""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""
சஞ்சலமான மனதின் வலி, விழியோரம் நீர்த்திவலைகளாய் சஞ்சரிக்கின்றது.

   """"""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""
இருதயம் இரு இதயமாகி துடித்தது நீ விலகிச்சென்ற பொழுதில்

   """"""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""
என் சோகங்களின் மொத்த பிம்பமாக எப்போதும் நீயே இருக்கிறாய்.

   """"""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""
உன்னோடு வாழ்ந்த நாட்கள், கனவில் தினமும் நகல்களாக.

   """"""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""
உனக்கும் எனக்குமான உறவை கொன்று விட்டேன்... உன் மீதான பெயரிடாத என் உணர்வுகளை என்ன செய்ய

   """"""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""
களவு போன கனவுகளை கவிதையால் மீட்க முயற்சிக்கிறேன், துருப்பாய் உன் நினைவுகள்

   """"""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""
பிரிவெனும் காயம் தந்ததோடு நிறுத்தியிருக்கலாம் நீ, தழும்பாக நினைவையும் தந்துவிட்டாய்..வாழ்க்கை முழுதும் வலித்துக் கொண்டேயிருக்கட்டுமென்று.

   """"""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""
காற்றைப்போல் நீக்கமற நிறைந்த உன் நினைவுகள்,எதொவொரு தேவநொடியில் நுரையீரல் தீண்டி சுவாசமாக மாறி என்னை திகைக்க வைக்கத் தவறுதேயில்லை.

   """"""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""
நாம் நிறைந்த நிகழ்வுகளோடு துவங்கி, நான் என்ற வெறுமையான நினைவோடு முற்றுப்பெற்றது ,நிறைவேறாத நம் காதல்

   """"""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""
நாம் கடந்துவந்த வழித்தடங்கள் கலைந்துவிட்டது, நீ தந்த வலித்தடம் மட்டும் வடுவாய் நெஞ்சில்

   """"""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""
அன்று ஆசையாய் ரசித்த சிணுங்கல்கள் எல்லாம்,இன்று இரவின் மடியில் விசும்பல்களாய்.

   """"""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""
யாருமறியா ஊமையின் கனவாக உன் நினைவு நெஞ்சைக் கவ்விக் கொண்டிருக்கிறது.

   """"""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""
வலிந்து அணியப்பட்ட ஒவ்வொரு புன்னகைக்குப் பின்னும் நிறைந்திருக்கும் புதைத்து வைக்கப்பட்ட வலிகள்.

   """"""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""
சலனமற்ற சிறு தனிமையையும் கூட,சித்ரவதை மிகுந்த பெரும்பொழுதாக மாற்றி இம்சிக்க வல்லவை உன் நினைவுகள்.

   """"""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""
வாள் வீசி கொன்றிருந்தால் ஒரேடியாய் இறந்திருப்பேன், வார்த்தை வீசி கொன்றுவிட்டாய் ஒவ்வொரு நொடியும் இறந்து கொண்டிருக்கிறேன்.

   """"""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""
அன்னப்பறவையைப் போல் பகுத்தறிய முடிந்திருந்தால் அஞ்சனமிட்ட என் விழிகள் தொலைத்த உன் அன்பிற்காக அதிகம் அழுதிருக்காது.

   """"""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""
உன்னைப்பற்றி ஏதேதோ எழுதவேண்டுமென எடுக்கும் காகிதத்தை எழுத்துகளால் நிரப்புவதைவிட கண்ணீர் பட்டு கசக்கி போடுவதே அதிகம்

   """"""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""
உறங்கிக் கழித்ததை விட அதிகமாய் உன் நினைவோடு உறவாடியே கழிகின்றன,என் இரவுகள்

   """"""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""
என் ரயில்பயணத்தில் எதிர்திசையில் கடந்துசென்ற மரம் நீ என்றாய்,உண்மைதான் மரம் இன்னும் அங்கேயேதான் நிற்கிறது,ரயில் தான் எதையோ தேடி,ஓடிக்கொண்டே!

   """"""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""
மழைக்காலத்தின் மரக்கதவுக்கிடையில் சிக்கிக்கொண்டு கிழிசலான பழைய தாவணியொன்று உன் நினைவைப் போல் கையோடு வரவுமில்லை,கதவோடு விடவும் முடியவில்லை.

   """"""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""
துக்கத்தையாவது தொண்டைக்குழியோடு அடைத்துக் கொள்ளலாம், கண்களுக்கு அத்தனை சாமர்த்தியம் போதவில்லை, கண்ணீரை தன்னோடு தக்கவைத்துக்கொள்ள!

   """"""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""
பிரசவவலியின் வேதனையோடு பாசியைப்போல் பிசுபிசுப்பான உணர்வொன்று மெல்லமெல்ல அவள் முகத்தில் பரவியது,பழைய காதலனை பரிதாபநிலையில் கண்டபோது.

   """"""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""
இன்னும் தொடர்ந்திருந்தால் நீ நேசித்த நானும்,நான் நேசித்த நீயும் தொலைந்துபோயிருப்போம்,ஆகவேதான் நேசத்தை நிறுத்தி,உறவை முறித்துக் கொண்டேன்.

   """"""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""
அடம்பிடித்து வாங்கியபலூனை ஆசையாய் கையிலேந்தும்நொடியில் சட்டென உடைந்துபோக சப்தமாய்அழும் குழந்தையானது மனம் நீ பிரிவை பிரகடனப்படுத்திய நொடியில்

   """"""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""
இணையவே முடியாதென தெரிந்தும் சேர்ந்தே பயணிக்கும் தண்டவாளங்களைப்போல என்வாழ்வோடு இணைந்தே பயணிக்கிறது வெறுக்கவும் மறக்கவும் முடியாத உன்நினைவுகள்

   """"""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""
உருவமறியா காரிருளொன்றுநெஞ்சையழுத்தி தொண்டையடைத்து விழிநீர் வழியச்செய்கிறது இன்னதென்று இனம்காண விகாராமாகச்சிரித்து என்பெயர் எதிர்காலம் என்றது.

   """"""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""
இரவின் அடர்த்தி ஆரம்பிக்கையில் பிறந்து யாருமறியா வண்ணம், என் விழியோடு வழிந்து, விடியல் வருமுன் தன் ஆயுள் முடித்துக் கொள்கிறதென் கண்ணீர்.

   """"""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""
உறக்கத்துக்கும் என் மேல் இரக்கமில்லாமல் போனதோ? விடியலுக்கும், அஸ்தமனத்துக்கும் வித்தியாசம் இல்லாமல், கடந்திடும் கணங்கள்; விழிகளில் ஈரங்கள்!

   """"""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""
நீ விட்டுச்சென்றாயென அழுது ஓய்ந்ததைவிட,உனக்காகவே கருக்கொண்ட ஆசைகளையும்,காதலையும் சிசுக்கொலை செய்ததுதான் நித்தமுமென் நித்திரை சிதைக்கிறது.

   """"""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""
நீ விலகி சென்றநாளில் அடித்துப்பெய்த மழையின் பின்னே விரக்தியின் விளிம்பில் எஞ்சிநின்றது அந்த தேநீர்க்கோப்பையும் அதில் தேங்கிய உன் நினைவுகளுமே.

    """"""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""
காலத்துக்கு ஒப்புவித்த காதலுக்காக நாட்கள் நகர்த்திக்கொண்டிருக்குகிறேன் நினைவு சூழ் தனிமையில்! ----
 
வெள்ளி, 28 செப்டம்பர், 2012

Miss you @

என் கண்களின் கருவிழி ரசித்த அவளை
என் இதயத்தின் கருவறையில் வைத்தேன்...

இன்று
என் இதயம்மட்டும் காணும் அவளை
என் விழிகள் காண தவிக்கிறது...

என் இதயத்தை
படுத்தும் அவள் நினைவுகளால்
...

என் கண்கள்
கண்ணீர் வடிக்கிறது
ஏனெனில்
இதயம் வடிக்கும் செந்நீரை துடைக்க
கண்கள் வடிக்கும் கண்ணீரால் தானே முடியும்...

காதலுக்கு கண்கள் இல்லை என்பது பொய்
உண்மையெனில்
இதயத்தின் இறுக்கத்தை இலகச்செய்ய
துணையின்றி போயிருக்குமே...

ஒவ்வொரு முறையும் - என்
உயிரை துறக்க நினைக்கும்போதெல்லாம்
தோற்றுப்போய் நிற்கிறேன் -என்
உடலைவிட்டு - அவள்
நினைவுகள் பிரிந்துவிடும் என்பதற்காக...

என்
இதயத்தை வாட்டும் அவள் நினைவுகளை
விளக்க நினைக்கும்போதெல்லாம்
விலகி நிற்கிறது என் உடலைவிட்டு
அவள் நினைவுகள் அல்ல
என் உயிர்... Kavi
Indru than manathuku konjam ... pain killer potar pole irukirathu ...En Athayudan peasi vitean . Aanal manathai thaikirathu Appayudan .... konjam sathathai uyarthi peasi vitean ..